Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.02.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம். இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால்தான் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த முடியும் என்று பேச்சு.
  • விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்கு 6 ஆயிரத்து 536 கோடி ஒதுக்கீடு. 23 லட்சம் மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை.
  • காவிரி படுகை பெருந்திட்டதிற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. காவிரி பாசன ஆறுகள், வடிகால்களை தூரவார 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிப்பு.
  • 14 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும். உணவு பதப்படுத்தும் கொள்கை 2018 மறுசீரமைக்கப்படும் என்றும் அறிவிப்பு.
  • பயிர் பாதிப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க 2 ஆயிரத்து 337 கோடி ரூபாய் பயிர்க்காப்பீடு மானியம் ஒதுக்கீடு. சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு.
  • 53 ஆயிரத்து 400 ஹெக்டேரில் நுண்ணீர் பாசன முறையை ஊக்குவிக்க 450 கோடி மானியம். பசுமைக்குடில், நிழல்வலை குடில் மூலம் உயர்மதிப்புள்ள பூக்களை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்ய 22 கோடி ரூபாய ஒதுக்கீடு.

Next Story

மேலும் செய்திகள்