16 நிமிடத்தில் 37 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (04.04.2023)
- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், லக்னோவை 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 4 ஆண்டுகளுக்கு பின் சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை வென்றது, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் தோனி களமிறங்கியபோது ரசிகர்களின் ஆரவாரத்தால் மைதானமே அதிர்ந்தது. சென்னை பேட்டிங்கின்போது கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா ஆட்டமிழந்தார். பின்னர் தோனி களமிறங்கியபோது "தோனி, தோனி" என முழங்கி ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் தங்களின் செல்போனில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்து தோனியை ரசிகர்கள் வரவேற்றனர்.
- ஐபிஎல் தொடரில் தோனி இந்த முறை பந்தயம் அடிப்பார் என ஹர்பஜன் சிங், தமிழில் ட்விட் செய்துள்ளார். பத்துதல பாயும், விடுதலை வியக்க வைக்கும்ன்னு ரிவ்யூ எழுதிருப்பாங்க, அதோடு தல தோனி இந்த முறை ஐபிஎல் கோதாவுல பந்தயம் அடிக்கிறது உறுதினும் எழுத சொல்லுங்க என்று பதிவிட்டுள்ளார். சிஎஸ்கே கூட விளையாடுறதும், ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒன்னு எனவும் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
- லக்னோவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் 18 ரன்களை எக்ஸ்ட்ராஸ்களாக சென்னை அணி வாரி வழங்கியது. போட்டிக்கு பிறகு பேசிய தோனி, நோ பால்கள் வீசுவதை கட்டுப்படுத்த சென்னை பவுலர்கள் முயற்சி செய்யாவிட்டால், புதிய கேப்டனின் கீழ் விளையாட நேரிடும் என்றும், இது தன்னுடைய இரண்டாவது எச்சரிக்கை என்றும் தெரிவித்தார்.
- லக்னோவிற்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்ட தோனி, ஐபிஎல் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதுவரை 236 போட்டிகளில் விளையாடி 5004 ரன்களை தோனி எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த 7வது வீரர், 5வது இந்திய வீரர் ஆகிய பெருமைகளும் தோனிக்கு கிடைத்துள்ளன.
Next Story
