தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (28.11.2022)

x

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் காலாவதியானது.

இனி ஆன்-லைன் ரம்மியால் ஒரு தற்கொலை நடந்தாலும் அதற்கு ஆளுநர் தான் காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று சுற்றுப் பயணம்.

அரியலூர் அருகே மாளிகைமேடு அகழாய்வு பணிகளை பார்வையிடுகிறார், முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணமாலை தகவல்.

தமிழக அரசியலில் இரண்டாவது இடத்தை பிடிக்க, பாஜக செய்யும் அரசியல் யுக்திகள், இங்கு எடுபடாது என்று, விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள கண்டிப்பாக கண்டென்ட் கிடைக்கும் என, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து.

திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்..


Next Story

மேலும் செய்திகள்