தந்தி மாலை செய்திகள் | Thanthi evening News | Speed News | Thanthi Short News (09.12.2022)

x

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில், நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும்...தொடர் மழையால், விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு...அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு...நாளை நடைபெறுவதாக இருந்த நிலையில்,புயல் மற்றும் தொடர் மழை காரணமாக, ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு.

"மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது..."நள்ளிரவு 2.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு எனவும் இந்திய வானிலை மையம் அறிவிப்பு.

புயல் வலுவிழந்தாலும், மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும்...வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்...பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம்... கடலோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு.

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம்... கடலோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு...

"மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும்..." சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்