4ம் தேதி 4 மணி... தீப்பிடிக்க போகும் திரை

x

விஜயின் வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் டிசம்பர் 4ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகிறது. வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் நிலையில், தமன் இசையில் விஜய், மானசி இணைந்து பாடிய ரஞ்சிதமே பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தீ தளபதி என்ற தலைப்பில் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட உள்ளது. இதற்கான அப்டேட்டுடன் படக்குழு பகிர்ந்துள்ள போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்