'விக்ரம்' ஸ்டைலில் 'தளபதி 67' Promo.. திரை தீப்பிடிக்கும் 'ஹாட்' அப்டேட் - LCU-வில் இணைகிறதா?

x

கோலிவுட்டில் வசூல் சக்கரவர்த்தி அந்தஸ்த்தில் அமர்ந்துள்ள விஜய்யும், கைதி, விக்ரம் என்ற படங்களை கொடுத்து ஒரு யூனிவர்ஸை கட்டி எழுப்பியுள்ள லோகேஷ் கனகராஜும் இணைவதால் படத்தின் மீது பயங்கர எதிர்பார்ப்பு எழுந்துவிட்டது..

LCU ஏற்படுத்திய தாக்கத்தால், தளபதி 67 படத்தில் யார் யார் நடிக்கப்போகிறார்க்ள் என கடந்து 6 மாதங்களாக கோலிவுட் மும்முரமாக பேசி வருகிறது...

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விஷால், பிரித்விராஜ், அர்ஜுன், திரிஷா, கவுதம் மேனன் என நீண்ட பட்டியல் தான் தளபதி 67 மீதான எதிர்பார்ப்பு எகிர்வதற்கு மற்றொரு காரணம்...

சில தினங்களுக்கு முன்பு கமல்ஹாசன், விக்ரம், சிலம்பரசன் நடிக்கப்போகிறார்கள் என்றெல்லாம் வதந்திகள் காட்டுத்தீயாக பரவி வருகின்றன...

முதல் அறிவிப்பில் இதுபற்றி எதையும் கூறாத படக்குழு, நடிகர், நடிகையர் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இருந்தாலும் ரசிகர்கள் மகிழும் அம்சமாக அனிருத்தின் என்ட்ரீ அமைந்துள்ளது...

கைதி, விக்ரம் படங்களை வைத்து LCU-வை உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தை அதில் இணைப்பாரா என்பது விக்ரம் படம் வெளியானதில் இருந்து நீடிக்கும் கேள்வி...

படம் போஸ்டர் வெளியாகும் போது LCU-ஆ இல்லையா என்பதை குறிப்பிடுவேன் என லோகேஷ் கூறியுள்ள நிலையில், இப்போது வெளியான அறிவிப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை...

இதனால் தளபதி 67 எல்.சி.யூவில் இருக்குமா என்ற கேள்வி தொடர, மற்றொரு பக்கம் தளபதி 67 படத்தை வைத்து இன்னொரு யூனிவர்ஸை உருவாக்குவாரோ என வியூகித்துள்ளனர் ரசிகர்கள்...

'இந்த வாரம் தளபதி 67 வாரம்' என படக்குழு கூறியுள்ள நிலையில், விக்ரம் படத்தை போன்று தளபதி 67 படத்திற்கும் வருகிற 3ஆம் தேதி புரோமோ வெளியாகும் என கூறப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்