தேனாம்பேட்டை to சைதாப்பேட்டை..அண்ணாசாலையில் புதிய மேம்பாலம்..பாலத்தின் 3D காட்சி வெளியீடு

x

சென்னை, அண்ணா சாலையில் கட்டப்படவுள்ள 4 வழித்தட உயர்மட்ட பாலத்தின் முப்பரிமாண காட்சி வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையில் 4 வழித்தட உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 621 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கட்டப்படவுள்ள பாலம் குறித்து விளக்கும் வகையில், அதன் முப்பரிமாணக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்