இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர்... 3வது போட்டி தர்மசாலாவிலிருந்து மாற்றம்

x

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி, தர்மசாலாவிலிருந்து மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் 3வது போட்டி, ஹிமாச்சல் பிரதேசத்தின் தர்மசாலாவில் நடைபெற இருந்தது.

ஆனால் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட தர்மசாலா மைதானம், இன்னும் சர்வதேச போட்டியை நடத்துவதற்கான தகுதியை எட்டவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து 3வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவிலிருந்து மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாற்றப்பட்ட போட்டியை இந்தூர் அல்லது ராஜ்கோட்டில் நடத்த பிசிசிஐ பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்