புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள்... காஷ்மீர் போலீஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

x

2019ஆம் ஆண்டு புல்வாமாவில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 19 பயங்கரவாதிகள் என காஷ்மீர் மாநில கூடுதல் தலைமை காவல்துறை இயக்குநர் விஜய் குமார் தெரிவித்துள்ளார். அவர்களில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் பாகிஸ்தானில் உள்ளதாகவும் கூறினார். காஷ்மீர் முழுவதும் 37 தீவிரவாதிகள் இருப்பதாக தெரிவித்த அவர், புல்வாமாவில் ஜெய்ஸ் இ முகமது அமைப்பை சேர்ந்த 8 பேரும், பாகிஸ்தானை சேர்ந்த 6 தீவிரவாதிகளும் இருப்பதாகவும், அவர்களை வளர விடமாட்டோம் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்