சிறையில் ஒன்று சேர்ந்த தீவிரவாத கும்பல்.. பெங்களூருவை டார்கெட் செய்து பயங்கரம்.. "இந்தியா முழுவதும்.. "-பகீர் பின்னணி

x

பெங்களூரில் பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம் .....

கர்நாடக மாநில உளவுத்துறை போலீசாருக்கு சில கும்பல்கள் சேர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இது குறித்த தகவலை பெங்களூர் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி போலீசாருக்கு ஹப்பாள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுல்தான் பால்யா என்ற பகுதியில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி முனையில் அவர்கள் இருந்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

அங்கு பதுங்கி இருந்த 5 நபர்களை கைது செய்து அவர்கள் தங்கி இருந்த அறைகளிலிருந்து ஏழு நாட்டு துப்பாக்கிகள் 41 தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சோஹில், ஓமர், ஜாகிர், முதாசிர் மற்றும் பைசல் என தெரிய வந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக மேற்கண்ட நபர்கள் கைதாகி பார்ப்பன அக்ரஹர சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுடன் சுனைத் என்பவரும் சிறையில் இருந்திருக்கிறார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளின் மூளையாக செயல்பட்ட டி நசீர் என்பவரும் அதே சிறையில் தான் அடைக்கப்பட்டிருக்கிறார். நசீருடன் மேற்கண்ட ஆறு நபர்களுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நசீர் ஆறு நபர்களையும் மூளை சலவை செய்து நாட்டிற்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்

கொலை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிய வந்த ஆறு பேரில் சுனைத் வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கிறார். சுனைத் மற்றும் நசீர் என இருவரும் சேர்ந்து பெங்களூரில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் திட்டத்தை நடத்த ஐந்து பேரையும் தயார் செய்ததும் தெரியவந்துள்ளது.

போலீசாரின் கண்களில் சிக்காமல் இருப்பதற்காக வாக்கிடாக்கி மூலம் ஒருவருக்கொருவர் உரையாடி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் 19 செல்போன்கள் மூலம் வாட்ஸ் அப் காலில் அடிக்கடி பேசி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் நசீர் மற்றும் சுனைத் ஆகிய இருவரும் துப்பாக்கிகள் தோட்டாக்கள் ஆகியவற்றை வாங்க ஐந்து பேருக்கும் உதவி புரிந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம எங்கெங்கு தாக்குதல் நடத்த இருந்தார்கள் ?என்ன வகையான தாக்குதல் நடத்த இருந்தார்கள் ? அதற்கு உதவி புரிந்தவர்கள் யாரெல்லாம் என்ன பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய சுனைத் என்பவரையும் உள்துறை அமைச்சகம் மூலமாக கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி முகமது ஷாரிக் மங்களூர் நகரில் ஆட்டோவில் குக்கர் குண்டு எடுத்துச் சென்றபோது அது வெடித்து ஆட்டோ ஓட்டுனர் மற்றும் ஷாரிக் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவேறாத நிலையில் மீண்டும் பெங்களூருவில் 5 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்