காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம்.. "யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை" - NIA கோரிக்கை

பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை விதிக்க கோரி நீதிமன்றத்தில் என்ஐஏ மனு தாக்கல் செய்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 2017-ஆம் ஆண்டு பயங்காரவாத, பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக யாசின் மாலிக்குக்கு உள்ளிட்டோருக்கு எதிராக என்ஐஏ வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கை டெல்லி என்ஐஏ நீதிமன்றம், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்த வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை குற்றவாளி என கடந்த ஆண்டு மே 19-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதே நேரத்தில், யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த ஆண்டு மே 25-ஆம் தேதி என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை விதிக்க கோரி டெல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மே 29-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com