வரன் பார்த்து திரும்பியபோது பயங்கரம்... நேருக்கு நேர் மோதிய கார், வேன் - 2 பேர் பலி - கரூரில் சோகம்

x

கரூரில், பெண்ணிற்கு வரன் பார்த்துவிட்டு காரில் திரும்பிய போது எதிரே வந்த வேனில் மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணத்திலிருந்து 8 பேர் பெண்ணிற்கு வரன் பார்ப்பதற்காக கோவை சென்றுள்ளனர். பின்னர் காரில் வீடு திரும்பிய அவர்கள், கரூர் மாவட்டம் பரமத்தி அருகே வரும்போது, எதிரே கோழி ஏற்றி வந்த வேன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த கவுரி, கவுதம் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காரிலிருந்த 6 பேரும் படுகாயமடைந்து மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் வேன் ஒட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி உள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்