பக்கா பிளான்.. பார்க்கிங் உள்ளே பயங்கரம்.. மிளகாய்ப்பொடி தூவி.. - ஆளை தூக்கிய மர்ம கும்பல்..!

x

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் வாகன காப்பகம் நடத்தி வரும் நிலையில், காப்பகத்தில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, வந்த மர்மநபர்கள் ஆனந்தராஜின் கன்ணில் மிளகாய் பொடியினை தூவி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து, மர்மநபர்களை தேடி வரும் போலீசார், முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்