இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்.. "இது எப்படி வந்துச்சு".. அதிர்ச்சியில் ராணுவம்

x

ANCHOR LINK

இந்தியா பாகிஸ்தான் எல்லையில், ஆளில்லா விமானத்தின் மூலம் ஹெராயின் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் முழுப்பின்னணியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்

பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து, அவ்வப்போது ஆளில்லா விமானங்களில் ஹெராயின் கடத்தப்படுவதும், அதை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்துவதும் தொடர் கதையாகி உள்ளது. தற்போதும் அதே போல ஒரு ஹெராயின் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில இது நடந்திருக்கிறது. லாகூரில் உள்ள ஹலோகி என்ற பகுதியில்தான் ஆளில்லா விமானம் உள்ளே நுழைந்தது

வழக்கத்தை விட பெரிய சைஸ் ஆளில்லா விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் வருவதை கண்டதும் BSF வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பின்னர்தான், ரசூல்புரா என்னும் கிராமத்தில், சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம் கிடந்ததாக அதிகாரி ஒருவரின் மூலம் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று ஆய்வு நடத்திய போது, அந்த ஆளில்லா விமானத்தில், ஆறு கிலோ எடைகொண்ட,உயர் ரக ஹெராயின் இருப்பது கண்டறியப்பட்டது.

ராணுவத்தினர் ஆளில்லா விமானத்தையும், ஹெராயினையும், போதைப்பொருள் தடுப்புப் படையிடம் உண்மையை கண்டறிய ஒப்படைத்துள்ளனர். பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து இது போன்ற ஆளில்லா விமானங்களின் உதவியுடன், ஆயுதங்கள் மற்றும் ஹெராயின் கடத்தல் அதிகரித்துள்ளது. இந்திய எல்லைக்குள் வந்த 22 ஆளில்லா விமானங்களை BSF சுட்டு வீழ்த்தியுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றது. ஆனால் பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்லைப்பகுதியில் இருந்து யார் இதை அனுப்பி வைக்கிறார்கள், எதற்காக அனுப்பி வைக்கிறார்கள் என்ற காரணங்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படாமேலே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வனப்பகுதியில் இருக்கும் வனக்காவலர்கள், இந்த ஆளில்லா விமானத்தை பறக்கவிடுக் கூடும், ராணுவத்தினர் பறக்க விடக்கூடும் என்ற சந்தேகமும் BSF வீரர்களிடம் எழுந்துள்ளது

தரையில் நின்று ரிமோட் மூலமாக இயக்கப்படும் இந்த ஆள் இல்லாத விமானங்கள், அதி வேகமாக இயங்கும் தன்மை கொண்டவை. இந்திய எல்லைக்குள் வந்த வேகத்தில், திரும்பி சென்றுவிடும். இதில் ஒரு சின்ன ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டிருக்கும். பாகிஸ்தான் ராணுவம் தன் எல்லைப்பகுதியை கண்காணிக்கவும், அவ்வப்போது இது போன்ற ஆளில்லாத விமானங்களை பயன்படுத்துகின்றன. அதிவேகமாக வந்து செல்லும் இவற்றை சுட்டுத்தள்ள தனிப்பயிற்சி தேவை. கடந்த சில ஆண்டுகளாக தாடுமாறிய ராணுவம், தற்போது ஆளில்லா விமானங்கள் வந்தால் சுட்டு பொசுக்கிவிடுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்