கடுமையாக கண்டித்த நீதிபதி - மாணவன் உடல் நல்லடக்கம்

x

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்த 7ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மாணவனின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் உரிய நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறியதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவனின் உடலை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆறு நாட்களுக்கு பின்னர் மாணவனின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் இறுதி சடங்கிற்கு பின்னர் நல்லடக்கம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்