25 பேர் பயணிக்க வேண்டிய வாகனத்தில் 50 பேர் பயணம் - பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து - விசாரணையில் தகவல்
கடையநல்லூர் அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 குழந்தைகள் காயமடைந்தனர். தென்காசி மாவட்டம் மங்களாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் வாகனம், சாம்பவர் வடகரை பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 குழந்தைகள் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய நிலையில், போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், 25 பேர் பயணிக்க வேண்டிய வாகனத்தில், குழந்தைகள், ஆசிரியர்கள் என 50 க்கும் மேற்பட்டோர் பயணித்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
Next Story
