"எங்களுக்கு இல்லையா சாப்பாடு" மொத்த ஓட்டலையும் சூறையாடிய 5 பேர் - வெளியான சிசிடிவி காட்சிகள்

"எங்களுக்கு இல்லையா சாப்பாடு" மொத்த ஓட்டலையும் சூறையாடிய 5 பேர் - வெளியான சிசிடிவி காட்சிகள்
Published on

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே, கோவில் கொடை விழாவுக்கு வந்த கும்பல் ஒன்று, உணவகத்தை சூறையாடிய சம்பவத்தில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரத்தை சேர்ந்த சிலர், கோவில் கொடை விழாவில் கலந்துவிட்டு, இரவு நேரத்தில், அண்ணாசிலை அருகே இயங்கி வரும் உணவகத்திற்கு வந்துள்ளனர்.

இரவு வெகுநேரமானதால், உணவு தீர்ந்துவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

கடை ஊழியர்களான ராதாகிருஷ்ணன், சரவணன் ஆகியோர் தாக்குதலில் காயம் அடைந்தனர். இந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து குற்றாலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, மகேந்திரன், மாரிமுத்து, பட்டு, கார்த்திக், குட்டி ராஜ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com