ஆக்ரோஷமாக சீறிப்பாயும் குற்றால அருவி.. கடும் வெள்ளப்பெருக்கு

x

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையினால் நேற்று அருவிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மற்ற அருவிகளில் ஒரு மணி நேர தடைக்கு பிறகு குளித்துச் சென்றனர். நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக இன்று அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பருக்கு ஏற்பட்டது. பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டுகிறது. எனவே அனைத்து அருவிகளிலும் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

இன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தற்போது பள்ளி விடுமுறை நாள் என்பதால் அதிகமாக வந்திருந்த சுற்றுலா பயணிகளும் குளிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்


Next Story

மேலும் செய்திகள்