மகளை 2 முறை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசில் பிடித்து கொடுத்த பெற்றோர்

x

தென்காசியில், 17 வயது சிறுமியை காதலித்த இளைஞரை, பெற்றோர் போலீசில் பிடித்து கொடுத்ததால், விரக்தியில் சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

தென்காசியை சேர்ந்த இளைஞர் வின்சென்ட்குமாரும், 17வயது சிறுமியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இதில், அச்சிறுமி இரண்டு முறை கர்ப்பமாகியுள்ளதாவும், பின் கலைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த சிறுமியுடன் வின்சென்ட்குமார் தனிமையில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த சிறுமியின் பெற்றோர், போலீசில் பிடித்து கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, வின்சென்ட் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இதையறிந்த அச்சிறுமி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

உடனே அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிறுமியை நெல்லை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்