"மல்யுத்த சம்மேளன செயல்பாடுகளுக்கு தற்காலிக தடை?" - மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு என தகவல்

x

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் செயல்பாடுகள் அனைத்துக்கும் தற்காலிக தடை விதிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார்கள் பூதாகரமான நிலையில், விளையாட்டு அமைச்சகம் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக மல்யுத்த சம்மேளன துணை செயலாளர் வினோத் தோமர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்