எருமை மாடுகளை திருடிய டெம்போ ஓட்டுநர்..சிசிடிவி உதவியுடன் மடக்கிப் பிடித்த போலீசார்

x

கன்னியாகுமரி அருகே விவசாயி-ன் எருமை மாடுகளை திருடிச் சென்ற கொள்ளையனை, சிசிடிவி உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன், தனது தென்னை தோப்பில் 5 எருமை மாடுகளை வளர்த்து வந்தார். அவை திருடுபோனதாக கிருஷ்ணன் அளித்த புகாரின்போரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஜோசப் என்ற டெம்போ ஓட்டுநரை கைது செய்தனர். விசாரணையில் எருமைகளை கடத்தி கேரளாவில் உள்ள கறிக்கடையில் விற்க திட்டமிட்டது அம்பலமானது.


Next Story

மேலும் செய்திகள்