சென்னையில் மீட்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள கோயில் சிலைகள் - பின்னணியில் சிலை கடத்தல் மன்னன்..?

x

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து வாங்கப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் சென்னையில் மீட்கப்பட்டுள்ளன.

பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் இவர் மீது 7 சிலை கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனிடையே அவர் நடத்தி வந்த கலைக்கூடம் மூலமாக சட்டவிரோதமாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதில் கடந்த 2008 முதல் 2011 வரை ஷோபா துரைராஜன் என்பவர் 3 சிலைகளை வாங்கியது தெரியவந்தது. இதன்பேரில் அவர் வீட்டிற்கு சென்ற போலீசார் ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகளை மீட்டனர்.

கலை பொருட்களை சேர்ப்பதில் ஆர்வம் கொண்ட ஷோபா துரைராஜனிடம் மேலும் 4 சிலைகள் இருப்பதும் தெரியவந்த நிலையில் மொத்தம் 7 சிலைகள் மீட்கப்பட்டன.

இதில் 3 சிலைகள் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது என தெரியவந்த நிலையில் அவற்றை கோயிலில் ஒப்படைப்பதற்கான பணிகளும் நடந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்