4 வழிச்சாலைக்காக இடிக்கப்பட்ட கோயில்-2 ஆண்டுகளாக புலம்பும் பக்தர்கள்..இதுவரை எந்த பயனும் இல்லை...

x

சீர்காழி அருகே நான்குவழி சாலைக்காக இடிக்கப்பட்ட குலதெய்வ கோயிலை விரைந்து கட்டிதர, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காத்திருப்பு கிராமத்தில் இருந்த அறநிலையத் துறைக்கு சொந்தமான சின்னந்தி மாரியம்மன் கோயில், 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக இடிக்கப்பட்டது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலைத்துறை, 37 லட்ச ரூபாய் ஒதுக்கியது. ஆனால், இந்த நிதியை வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், கோயில் கட்டும் பணி நடைபெறாமல் இருப்பதாகக் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலை ஒதுக்கிய நிதியைக் கொண்டு கோயிலை விரைந்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்