பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை.!

x

பிரேசிலில் அரசாங்கத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக டெலிகிராம் செயலி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிரேசில் அரசை விமர்சிக்கும் தவறான கருத்துகளை நீக்காவிட்டால், 72 மணி நேரம் முடக்கப் போவதாகவும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 82 லட்ச ரூபாய் அபராதமாக டெலிகிராம் நிறுவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரேசில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், பிரேசிலில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், போலி செய்தி மசோதா நிறைவேற்றப்பட்டால் பிரேசிலை விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும் டெலிகிராம் பதிவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்