திடீரென போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்.. போலீசாருடன் பயங்கர தள்ளுமுள்ளு - ஹங்கேரியில் பரபரப்பு

திடீரென போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்.. போலீசாருடன் பயங்கர தள்ளுமுள்ளு - ஹங்கேரியில் பரபரப்பு
Published on

ஹங்கேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஹங்கேரியின் ஆளும் கட்சியின் தலைமையகம் அருகே கூடிய அவர்கள், கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், ஆசிரியர்களின் பணிச்சுமையை அதிகரிக்கும் புதிய நிலைச் சட்டத்திற்கு எதிராக, முழக்கமிட்டனர். இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் பேரணியாக செல்ல முயன்ற ஆசிரியர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது இரு தரப்பிற்கும் இடையே தள்ளு முற்று ஏற்பட்டதால் போர்களம் போல் காட்சி அளித்தன.

X

Thanthi TV
www.thanthitv.com