"ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல்" - கல்வித் துறை வட்டாரங்கள் தகவல்

x

"ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல்" - கல்வித் துறை வட்டாரங்கள் தகவல்

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்குவதில் கால தாமதம் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து பெறப்படும் சம்பளப் பட்டியலில், மாவட்ட கல்வி அலுவலர் கையெழுத்திட்ட பிறகு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படுகிறது. இதற்கிடையே, பள்ளிக்கல்வித்துறையில்

ஏற்கெனவே இருந்த நிர்வாக முறையை மாற்றி, புதிய அரசாணை அடிப்படையில், 152 மாவட்ட கல்வி அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல மாவட்ட கல்வி அலுவலர்கள் இன்னும் முழுமையாக பொறுப்புகளை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்குவதில் கால தாமதம் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மாற்றி அமைக்கப்பட்டதால், நிதி பரிமாற்றம், ஆன்லைன் நடைமுறைகள் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நடைபெறாததால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைப்பதிலும் காலதாமதம் ஏற்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்