"ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்தினார்கள்" - தற்கொலைக்கு முன் மாணவன் வெளியிட்ட வீடியோ

x

"ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்தினார்கள்" - தற்கொலைக்கு முன் மாணவன் வெளியிட்ட வீடியோ


அம்பத்தூரை அடுத்த பாடியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு 2 மகன்கள். இதில் 14 வயதான இளைய மகன் பாரதி செல்வா, அங்குள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பாரதி செல்வா, திடீரென தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவன் தற்கொலைக்கு முன்பாக வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதில் பள்ளி ஆசிரியர்கள் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். தனது சொந்த ஊரிலேயே இறுதி சடங்கு நடக்க வேண்டும் என்றும் மாணவன் குறிப்பிட்டிருந்தார். இதன்பேரில் மாணவன் குற்றம் சாட்டிய பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கொரட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்