பள்ளி குழந்தைகள் முன் ஆசிரியை செய்த செயல் - அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்

x

கேரளாவில், ஆரம்பப் பள்ளியில் பணிபுரியும் உதவியாளரை, ஆசிரியை ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் சாந்தம்மா. இவருக்கும் அதே பள்ளியில் பணிபுரியும் உதவியாளர் பிஜி என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வகுப்பறையில் குழந்தைகள் முன்னிலையில் ஆசிரியை சாந்தம்மா, பிஜியை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை எட்டி உதைத்து கதவை மூடும் காட்சிகள் சிசிடிவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பள்ளியிலும், காவல்நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்