மாணவனுக்கு ஆசிரியர் செய்த செயல்... பள்ளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்....

x

தென்காசி மாவட்டம் வீரிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவரை, சரியாக படிக்கவில்லை எனக்கூறி ஆசிரியர் சாலமன் என்பவர் அடித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவரின் பெற்றோர், நேற்று ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் சாலமனை பணியிட மாற்றம் செய்யக் கோரி, மாணவர்களின் பெற்றோர் பள்ளி முன்பு திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்