சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை - சிவகங்கையில் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வீரசிங்கம் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது, இளையான்குடியில் உள்ள மதரஸாவில் அரபு ஆசிரியராக பணியாற்றிய போது, 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம், ஆசிரியர் சாகுல் ஹமீதுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

X

Thanthi TV
www.thanthitv.com