ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 தேதி அறிவிப்பு..! | TNTET Paper II Exam

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 க்கான கணினி வழி தேர்வு வரும் ஜனவரி 31 ந் தேதி தொடங்கி பிப்ரவரி 12 ந் தேதி வரை நடைபெறுகிறது. 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் 26 ந் தேதி வரை பெறப்பட்டன. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் 31 முதல் பிப்ரவரி மாதம் 12 ந் தேதி வரை ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 க்கான கணினி வழி தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை, அனுமதிச்சீட்டு வழங்கும் விபரம் வரும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

X

Thanthi TV
www.thanthitv.com