டாஸ்மாக் சுவற்றில் ஓட்டை... களைப்பு நீங்க கொஞ்சம் சரக்கு... ஜாலி செய்து சிக்கிய திருடர்கள்
கும்மிடிப்பூண்டி அருகே அரசு மதுபானக்கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு திருட முயன்றவர்கள், அங்கேயே அமர்ந்து மது குடித்த போது போலீசாரிடம் பிடிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் தண்டலச்சேரியில் உள்ள மதுபான கடைக்கு சென்ற 2 பேர் பின்பக்க சுவரை கடப்பாறையால் துளையிட்டு உள்ளே சென்றுள்ளனர்.
பின்னர் களைப்பு நீங்குவதற்காக மது குடித்த அவர்கள் திருட சென்றதை மறந்து அங்கேயே அமர்ந்து சத்தமாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
பூட்டி இருக்கும் மதுபானக்கடைக்குள் இருந்து சத்தம் வந்ததை தொடர்ந்து, அவ்வழியே சென்ற போலீசார் மது போதையில் இருந்த சதீஷ் மற்றும் முனியனை கைது செய்தனர்.
Next Story
