டாஸ்மாக் வசூல் பணத்தில் ரூ.20 ஆயிரம் குறைவு - மேற்பார்வையாளர் கடை விற்பனையாளர் இடையே மோதல்

x

டாஸ்மாக் வசூல் பணத்தில் ரூ.20 ஆயிரம் குறைவு - கேள்வி கேட்ட மேற்பார்வையாளர் - புரட்டியெடுத்த கடை விற்பனையாளர் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

திருவையாறு அருகே மேற்பார்வையாளரை மதுபான கடை விற்பனையாளர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், விளாங்குடி சாலையில் உள்ள அரசு மதுபான கடையில் அழகுராஜா மேற்பார்வையாளராகவும், கோடிஸ்வரன் சிங்காரம் விற்பனையாளராகவும் பணியாற்றி வருகின்றனர். விற்பனை கணக்கை பார்த்ததில் 20 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்ததை அறிந்து மேற்பார்வையாளர் அழகுராஜா கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த கோடிஸ்வரன் சிங்காரம், அழகுராஜாவை பலமாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்