டாஸ்மாக் பாட்டில்கள்- உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி

x

டாஸ்மாக் கடைகளில் திரும்பப் பெறப்படும் பாட்டில்களை விற்பதற்கான டெண்டர் விதிகள் மற்றும் விலையையும் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, டாஸ்மாக் பாட்டில்களை சேகரித்து வைப்பதற்கான இடவசதி ஏற்பாடு செய்வதில் பெரும் சிக்கலாக உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் தெரிவித்தபோது, நிறைய வருமானம் ஈட்டும் துறையில் கட்டடம் கட்டுவது சிரமமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.பாட்டில்களை விற்பதற்கான டெண்டர் விதிகள் மற்றும் விலையையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 5 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.




Next Story

மேலும் செய்திகள்