சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி -திடீரென தீப்பற்றியதால் நேர்ந்த பயங்கரம்

x

மத்திய பிரதேசத்தில் எரிபொருள் ஏற்றி சென்ற டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்ததில் இருவர் உயிரிழந்தனர். இந்தோரில் இருந்து கார்கோன் நோக்கி எரிபொருள் ஏற்றி சென்ற டேங்கர் லாரி நிலைத்தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. அதனால், லாரியில் இருந்து வெளியே கொட்டிய எரிபொருளை சேகரிக்க அப்பகுதியினர் கூடியினர். அப்போது லாரியில் இருந்த எரிப்பொருள் தீப்பற்றி எரிந்தது. திடீரென பற்றிய தீயால் லாரியை சுற்றி இருந்தவர்கள் காயமடைந்தனர். விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்