200 டன் கஞ்சாவை தீ வைத்து அழித்த போலீசார் | கஞ்சா கடத்தலை தடுக்கும் பணி

x

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 200 டன் கஞ்சாவை போலீசார் தீ வைத்து எரித்தனர். கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க விசாகப்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை சாவடிகளை அமைத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 385 கிலோ கஞ்சா மற்றும் 133 கிலோ கஞ்சா ஆயிலை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், பறிமுதல் செய்த கஞ்சாவை கோடூரில் வைத்து போலீசார் தீயிட்டு அழித்தனர். தீ வைக்கப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 250 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கஞ்சா தோட்டங்களை அழித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்