அடுத்த 4 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை? | Tamilnadu | Rain | Weather

x

அடுத்த 4 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை? | Tamilnadu | Rain | Weather

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில், இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், 9-ஆம் தேதி, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், அது, அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில், அடுத்த 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்