விதவிதமாக நம்பர் பிளேட் ஒட்டும் வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு !

x

இந்த ஆண்டு, விதிகளை மீறி வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தியதில், ஒரு லட்சத்து 34 ஆயிரம் வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு போக்குவரத்து காவல் துறை ஆணையர் குல்தீப் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்திய விவரங்களை பதிவிட்டிருந்தார். அதன் பின்னூட்டத்தில், சென்னையில் இது போன்று வழக்குகளில் காவல்துறை தீவிரம் காட்டுவதில்லை என ஒருவர் பதிவிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சென்னை போலீசார் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளனர். மேலும், 2 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்