தமிழகம் - காசிக்கு உள்ள தொடர்பை வெளிக்கொணர திட்டம் - மத்திய அரசின் புதிய நடவடிக்கை

x

தமிழகத்திற்கும் காசிக்கும் உள்ள தொடர்பை வெளிக்கொணர, காசி தமிழ் சங்கத்தில் ஒரு மாத காலத்திற்கு மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக சென்னை கோவை ,ராமேஸ்வரம் ஆகிய ஊர்களிலிருந்து,12 வெவ்வேறு தேதிகளில் கலை, இலக்கியம், ஆன்மீகம் கல்வி ஆகிய துறைகளில் துறைச் சார்ந்த வல்லுனர்களை காசிக்கு அழைத்துச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் 8 நாட்கள் காசியில் தங்கியிருந்து காசி,அயோத்தி, கங்கை நதி ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

தமிழகத்திற்கும் காசிக்கும் உள்ள தொடர்பை விழிப்புணர்வதற்கு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை காசியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.

காசி தமிழ் சங்கத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அறிவு சார் உதவிகளை இந்து பனாரஸ் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐஐடி இணைந்து வழங்குகின்றன


Next Story

மேலும் செய்திகள்