10 நிமிடத்தில் 37 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Evening News | Speed News (03.04.2023)

x
  • இன்று நடைபெறும் அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் முதல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
  • இந்த கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.


  • 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வெற்றி கூட்டணி தயாராகிக் கொண்டிருப்பதாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக, பாஜக உடனான கூட்டணியில் தமாகா இருப்பதாக தெரிவித்தார்.


  • தமிழக சட்டப்பேரவையில், வரும் 6-ம் தேதி, சிறுதொழில் செய்பவர்கள் பயன் பெறும் வகையில் 41 அறிவிப்புகளை அறிவிக்க உள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
  • மேலும், வருமான வரி கட்டுபவர்கள், அரசுத்துறையில் வேலை செய்பவர்களுக்கு எல்லாம், மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாயை கொடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


  • ஐபிஎல் தொடரின் 5வது லீக் போட்டியில் மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி பெற்றது.
  • பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
  • பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்