தமிழ்நாட்டின் முதல் அரசியல் தலைவர்.. கனிமொழிக்கு கிடைத்த அங்கீகாரம்

x

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியின் டிவிட்டர் கணக்கிற்கு, கிரே நிற குறியீட்டை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. பிரபலங்களுக்கு வழங்கும் அடையாள குறியை டிவிட்டர் நிறுவனம் அண்மையில் மாற்றியது. இதன்படி, நீலம், கிரே மற்றும் தங்க நிறத்தில் அடையாள குறி வழங்கி வருகிறது. கிரே நிறம் அரசு அல்லது பன்னாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும் நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் ட்விட்டர் கணக்கிற்கு, கிரே நிற குறியீட்டை டிவிட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன்மூலம் கிரே டிக் பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசியல் தலைவராக கனிமொழி பதிவாகியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்