எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த தமிழக இளைஞர் - முதல்வர் ஸ்டாலின் போட்ட 'ட்வீட்'

எவரெஸ்ட் மலை ஏறி சாதனை படைத்த தமிழக இளைஞருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை என்ற 27 வயது இளைஞர், உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் எவரெஸ்ட் உச்சியை அடைந்தை அறிந்து மகிழ்ச்சி அடைந்த‌தாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதனை படைத்த ராஜசேகருக்கு தன்னுடைய பாராட்டுக்களையும் டிவிட்டர் மூலமாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com