காவல், நீதி மற்றும் சட்ட உதவி வழங்குவதில் திறமையாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2-வது இடம் பெற்றுள்ளது.

x

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் அமைப்பு, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்திய நீதி அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கையில், காவல், சிறைத்துறை, நீதி மற்றும் சட்ட உதவி வழங்குவதில் சிறந்த மாநிலங்கள் குறித்து தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டுக்கான அறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், காவல், சிறைத்துறை நீதி வழங்குவதில் நாட்டிலேயே கர்நாடகா முதலிடம் பிடித்துள்ளது. 2-வது இடத்தில் தமிழகமும், 3வது மற்றும் 4வது இடத்தில் தெலங்கானா மற்றும் குஜராத் மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. தனித்தனியாக பார்க்கும் போது, சிறை மற்றும் நீதித்துறையில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், காவல்துறையில் 6-வது இடத்தையும், சட்ட உதவிகள் வழங்குவதில் 12-வது இடத்தையும் தமிழகம் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்