பாலியல் புகாரில் தேடப்பட்ட எஸ்.ஐ - கொல்கத்தாவில் தட்டி தூக்கிய தமிழக போலீஸ்

x

சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த ஆண்டு போலீசில் புகாரளித்தார். அதில், புனித தோமையார்மலை ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த 56 வயதான ஆண்ட்ரூஸ் கார்ட்வேல் என்பவர் தன்னை ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் தலைமறைவானார். இந்நிலையில், தலைமறைவான ஆண்ட்ரூஸ் கார்ட்வேல்லை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கொல்கத்தாவில் பதுங்கி இருந்த ஆண்ட்ரூஸ் கார்ட்வேல்லை, போலீசார் கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்