இந்திய அணிக்காக வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் - திண்டுக்கலில் உற்சாக வரவேற்பு

x

உலக கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் இடம்பெற்ற, தமிழக வீரர், வீராங்கனைக்கு திண்டுக்கல்லில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம், பூனேவில் கடந்த 21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை, உலக கோப்பை ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய ஆண்கள் அணி இரண்டாமிடத்தையும், இந்திய பெண்கள் அணி மூன்றாமிடத்தையும் பெற்றது. இந்திய அணியில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் மற்றும் சுஷ்மிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். குறிப்பாக பெண்கள் அணிக்கு சுஷ்மிதா கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், போட்டியை முடித்து சொந்த ஊர் திரும்பிய இருவருக்கும், ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்