இங்கிலாந்தில் சாதித்த தமிழக வீரர்.. ஒற்றை ஆளாய் இங்கிலீஷ் கால்வாயில் அசால்ட்..

x

இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார் தேனியை சேர்ந்த 15 வயது சிறுவன்...

தேனியைச் சோ்ந்த சினேகன் கடந்த 2015ம் ஆண்டு முதல் தேனி மாவட்ட நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெற்று வருகிறாா். இந்நிலையில் சினேகன் கடந்த 18ம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலக் கால்வாயை நீந்தியே கடந்து சாதனை படைத்துள்ளார்... இதுவரை ஆங்கிலக் கால்வாயைக் கடந்தவர்கள் இங்கிலாந்தில் இருந்து பிரான்சிற்கு நீந்தி பின்னர் பிரான்சில் இருந்து இங்கிலாந்திற்கு படகின் மூலம் திரும்பியுள்ள நிலையில், சினேகன் இங்கிலாந்தில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்து மீண்டும் நீந்தியே திரும்பி வந்ததாக நீச்சல் பயிற்சியாளா் விஜயகுமாா் பெருமிதம் தெரிவித்தார். அதிக நீரோட்டமும், 14 முதல் 15 டிகிரி செல்சியஸ் வரை குளிரும் உள்ள இக்கால்வாயில் 72 கிலோ மீட்டர் தூரம் சினேகன் நீந்தியதாக குளோபல் அவாா்டு என்ற அமைப்புச் சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆங்கிலக் கால்வாயை ஏற்கெனவே தமிழகத்தைச் சோ்ந்த குற்றாலீஸ்வரன் நீந்திக் கடந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்