ஹூண்டாயுடன் கைகோர்க்கும் தமிழக அரசு

x

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஹூண்டாய் கார் நிறுவனத்துடன், 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர் ஒப்பந்தம் இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கும் இடையே, இன்று வியாழக்கிழமை காலை சென்னையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் நூறு சதவிகித துணை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா சார்பாக நவீன வகை கார்கள் உருவாக்குதல், மின் வாகன மின்கலன் கூட்டப்பட்ட தொகுப்பு, மின் வாகன மின்னேற்று நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ள தேவையான வசதிகளை 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், மேற்கொள்ள தேவையான வசதிகளை செய்து தருவது தொடர்பாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்