இலங்கையிலிருந்து மீண்டுவந்த தமிழக மீனவர்கள்.. உற்சாகமாக வரவேற்ற பாஜகவினர்..

x

கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை போலீசார் கைது செய்தனர். மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்த நிலையில், 22 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. 22 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த மீனவர்களை, பாஜக சார்பில் சால்வை அணிவித்தும், உணவு பொருட்கள் தந்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்