தமிழ்நாடு கிரிக்கெட் லீக் தொடர் - கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்த அமைச்சர்

x

தமிழ்நாடு கிரிக்கெட் லீக் தொடரை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். கிராமப்புற இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாக, சேலம் எம்.பி. எஸ்.ஆர் பார்த்திபன் ஏற்பாட்டில் இந்த தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் கந்தாஸ்ரமம் பகுதியில் நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன், கிரிக்கெட் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்கள் ஜொலிக்கும் நிலையை உருவாக்குவோம் என உறுதி அளித்தார்


Next Story

மேலும் செய்திகள்