"2ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் தமிழ் மொழி பாடம் கட்டாயம்" - உயர்கல்வித்துறை செயலாளர் அதிரடி உத்தரவு

x

"2ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் தமிழ் மொழி பாடம் கட்டாயம்" - உயர்கல்வித்துறை செயலாளர் அதிரடி உத்தரவு


கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் தமிழ் தேர்வை கட்டாயமாக்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி பாடம் நடத்தப்படவில்லை என தகவல் பரவியது. இதனையொட்டி உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பிறப்பித்த உத்தரவில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் 2ம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகளில் தமிழ் பாடத்திற்கான தேர்வுகளை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்